சனி, 6 டிசம்பர், 2008

2. கேரப் கிளீனர்


உங்களது கணினியிலுள்ள தேவையற்ற பைல்களை பத்திரமாக அழிக்க வேண்டுமா? அதற்கு முன் இந்த தேவையற்ற பைல்கள் எவ்வாறு உருவாகின்றன என்று பார்ப்போம்....

இன்றைய கணினி உலகத்தில் நாம் எண்ணற்ற அப்ளிகேஷன்களை நிறுவுகின்றோம். தேவையில்லை என்று தோன்றும்போது அதை அழித்து விடுகின்றோம். பல சமயங்களில் அழித்த பின்பும் அதனைச் சார்ந்த ரெஜிஸ்ட்ரி என்ட்ரிக்களும், அதனுடைய புரோகிராம் ஷார்ட்கட்டுகளும், அதனுடைய டைரக்டரிகளும் முறையாக அழிக்கப்படுவது இல்லை.

அதுபோல சில புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்திடும்போது அது நம் கணினியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் (உதா. டெம்ப் டைரக்டரி) விரிவாக்கப்பட்டு பின்பு நாம் குறிப்பிடும் புரோகிராம் டைரக்டரியில் இன்ஸ்டால் ஆகிறது. இந்த விரிவாக்கப்பட்ட தற்காலிக கோப்புகளும் அழிக்கப்படுவதில்லை.

நாம் பயன்படுத்தும் பிரசர்களும் தற்காலிகமாக நிறைய விவரங்களை நம் கணினியில் விட்டுவிடுகின்றன. இது நம் பிரசர் ஹிஸ்டரிகளாகவும், டெம்பரரி இன்டர்னெட் பைல்களாகவும், குக்கிகளாகவும் சேமிக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து பைல்களும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிக்கும் வரை நமது கணினிக்கு பாதிப்பு இல்லை. நாளடைவில் இதன் அளவு அதிகமாகும் பொழுது குறிப்பிடத்தக்க அளவில் கணினியின் வேகமானது மட்டுப்படுகிறது.

முன்பு நாம் தனித்தனியாக விண்டோசின் டிஸ்க் கிளீனர், பிரசர்களின் இன்டர்நெட் ஆப்சன்களைப் பயன்படுத்தி இந்த குப்பை பைல்களை அழித்துக் கொண்டிருந்தோம். ஆனால் ரெஜிஸ்ட்டிரி என்ட்ரிக்களை இவ்வாறு மேம்போக்காக அழிக்க முடியாது. அவ்வாறு அழித்தால் அது விண்டோசின் இயக்கத்தையே பாதித்து விடும்.

மேற்சொன்ன இந்த குப்பைக் கோப்புகளை அழிக்க கேரப் கிளீனர் என்னும் இலவச மென்பொருள் உதவுகிறது. இதைப் பயன்படுத்தும்பொழுது விண்டோஸ் பயன்படுத்தும் எல்லாவகை டெம்ப் டைரக்டரி, பிரசர்களின் குக்கீகள், ஹிஸ்டரி என்ரிக்கள், அழிக்கப்பட்ட புரோகிராம்களின் ரிஜஸ்டரி என்டரிக்கள், தேவையில்லாத ரெபரன்ஸ்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து அழிக்கும் கோப்புகளை லிஸ்ட் செய்கிறது. இதை ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டு அழிக்கும் பிராசஸை மேற்கொள்ளலாம்.

ரெஜிஸ்டரி என்ரிக்களை அழிப்பதற்கு முன்பு அதனை பேக்அப் செய்ய விருப்பமெனில் பேக் செய்யும் வசதி உண்டு. ஏனெனில் அழித்த பின்பு விண்டோஸ் இயக்கத்தில் தடை ஏதேனும் ஏற்படும் சமயத்தில் நாம் செய்த ரெஜிஸ்டரி மாறுதல்களை ரீஸ்டோர் செய்வதன் மூலம் திரும்பப் பெறலாம்.

இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இதைப் பெற இங்கே அழுத்தவும். இதேவகையான மற்ற கிளீனர்களை விட இதனுடைய வேகம் மெச்சத்தகுந்த விதத்தில் உள்ளது.



வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

ராக்கெட் டாக் (Rocket Dock)

நீங்கள் மாறுபட்ட டெஸ்க்டாப்பை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உங்களுக்காக ஒரு சாப்ட்வேரை அறிமுகப்படுத்துகிறேன். ராக்கெட் டாக் என அழைக்கப்படும் இந்த சாப்ட்வேரை இங்கே சென்று பெற்றுக்கொள்ளவும்.

இன்ஸ்டால் செய்து பின்னர் உங்கள் கணினி திரையானது கீழ்க்கண்டவாறு காட்சியளிக்கும்.


நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இதை மாற்றி அமைத்துக் கொள்வதுதான். மேல்பாகத்தில் தெரியும் ஐகான்களைக் கிளிக் செய்தால் அந்த அப்ளிகேஷன் திறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டால் செய்திடுகையில் பொதுவாக இருக்கும் மை கம்ப்யூட்டர், மை நெட்வொர்ட் ஐகான்கள் வந்துவிடும். விருப்பப்பட்ட புரோகிராம்களை சேர்த்துக்கொள்ளவும், தேவையில்லாத ஐகான்களை டெலீட் செய்திடவும் வசதியுண்டு. திரையின் மேலுள்ள பட்டையின் வெற்றிடத்தில் ரைட் கிளிக் செய்து ஐகான்களை மாற்றவும், புது புரோகிராம்களை சேர்க்கவும் முடியும். அடிக்கடி திறக்கும் புரோகிராம்களுக்கான குறுக்கு வழிகளை அமைத்திடுவதன் மூலம் நமது வேலைகளை எளிதாக்கிக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு பயர்பாக்ஸ் உலவிக்கான வழியை அமைத்திடுவதை பார்க்கலாம்.

1. கூகிள் பக்கத்தைத் திறந்து தேடுபொறியில் படங்களைத் தேடுமாறு அமைத்துக் கொள்ளவும். தேடும் இடத்தில் Firefox.png என்று அடித்து தேடவும். உங்களுக்குப் பிடித்தமான ஐகானைத் தேர்ந்தேடுத்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளவும்.

2. சேமித்த இடத்திலிருந்து கட் செய்து Program Files > RocketDock > Icons என்ற இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.

3. திரையில் தெரியும் ஐகான் பட்டையின் வெற்றிடத்தில் ரைட் கிளிக் செய்து Add item > Blank icon பிரிவை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது கேள்விக்குறியுடன் கூடிய ஒரு ஐகான் பட்டையில் இணைந்து விடும்.

4. கேள்விக்குறியுடன் கூடிய ஐகானை வலது கிளிக் செய்து Icon settings-ஐ தேர்வு செய்யவும். வரும் விண்டோவின் Properties பிரிவில் அந்த புரோகிராமின் பெய ரையும் அதன் இடத்தையும் தெரிவு செய்தால் உங்கள் விருப்பமான புரோகிராம் இந்த பட்டையில் இணைந்து விடும்.

இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. குறைந்த நினைவகம் உள்ள கணிணியில் கூட விரைவாக இயங்கும்.

உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்